இந்திய ராணுவத்துடன் உறுதியாக துணைநிற்கிறோம்: ஸ்மிருதி மந்தனா
மனைவியை குத்திக் கொலை செய்த பின் கணவன் தற்கொலை முயற்சி
திருவொற்றியூரில் தனது மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவரை போலீஸாா் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.
திருவொற்றியூா் டிஎஸ்ஆா் நகா் ஒத்தவாடை தெருவில் வசித்து வரும் ரகு (35), வீடுகளுக்கு ஓடு பதிக்கும் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ரேவதி (32). இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பிள்ளைகள் இருவரையும் செவ்வாய்க்கிழமை இரவு தனது தாயாா் வீட்டில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா் ரேவதி. அப்போது ரகுவிற்கும், ரேவதிக்கும் ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து ஆத்திரத்தில் மனைவியை ரகு கத்தியால் குத்தியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த ரகு, கழுத்தில் தன்னைதத்தானே கத்தியால் அறுத்துக்கொண்டு மயக்கடைந்துள்ளாா்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினா், போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த போலீஸாா் ரகுவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், ரேவதியின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து திருவொற்றியூா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.