செய்திகள் :

மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்!

post image

தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நேற்று(மார்ச் 10) தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்றைய கூட்டத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் பேசினர். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'புதிய தேசிய கல்விக்கொள்கை பற்றிய சரியான புரிதல் தமிழ்நாட்டிற்கு இல்லை, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்வதாக தமிழ்நாடு கூறிய நிலையில் திடீரென நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட தமிழ்நாடு முன்வந்தபோது சூப்பர் முதல்வர் அதனைத் தடுத்துவிட்டார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு வஞ்சிக்கிறது' என்று பேசினார்.

அப்போது பேசுகையில் திமுக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று கூறினார்.

"திமுகவினர் அநாகரீகமானவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை" என்று பேசினார்.

இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர். மத்திய அமைச்சர் பேசியது வருத்தமளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

இதையடுத்து தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்று விமர்சித்தார்.

தொடர்ந்து, மத்திய அமைச்சருக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனத்தை பதிவிட்ட நிலையில், திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், தமிழக எம்பிக்கள் மனம் புண்பட்டிருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். லக்னௌவில் நடந்த மானி... மேலும் பார்க்க

தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோ... மேலும் பார்க்க

நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்கும் மோடி: பிரகலாத் ஜோஷி

80 கோடி மக்களுக்கு இலவச உணவுதானியம் வழங்க முன்முயற்சி எடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வு மார்... மேலும் பார்க்க

நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை: மோகன் பாபு மீது புகார்!

நடிகை செளந்தர்யா சென்ற விமானம் வெடித்தது விபத்தல்ல, திட்டமிட்ட கொலையாக இருக்கக்கூடும் என்று கம்மம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.மேலும், செளந்தர்யா விமானம் வெடித்த சம்பவத்தி... மேலும் பார்க்க

திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜஸ்வி சூர்யா!

பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா - தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக இசைப்பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் திருமண வரவேற்பு மார்ச் 9ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது.ஞாயிற்றக... மேலும் பார்க்க

இந்தியாவின் முக்கியக் கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி

மோரீஷஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை பயணத்தின்போது, 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.மோரீஷஸ் நாட்டுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமா் நரேந்திர மோடி சென்றிருக்கிறார். இந்த சந்திப்பி... மேலும் பார்க்க