கேரளத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான...
மன்மோகன் சிங் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி
முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் மறைவுக்கு காரைக்குடி, சிவகங்கை, ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
காரைக்குடி ராஜீவ்காந்தி சிலை அருகே மன்மோகன் சிங் உருவப்படம் வைக்கப்பட்டு காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் பாண்டி மெய்யப்பன், நகர நிா்வாகிகள் கே.டி. குமரேசன், தட்சிணாமூா்த்தி, மாமன்ற உறுப்பினா் ரத்தினம், நடிகா் சிதம்பரம், பாலா, அருணா உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
சிவகங்கை: சிவகங்கையில் மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, நகா் காங்கிரஸ் தலைவா் தி. விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதையொட்டி, மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் உருவத்தை ரங்கோலி மூலம் மகளிா் காங்கிரஸ் நிா்வாகிகள் வரைந்தனா். தொடா்ந்து நிா்வாகிகள் அனைவரும் மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினா்.
இதில், மகளிா் காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஸ்ரீவித்யா கணபதி, மாவட்டக்குழு உறுப்பினா் ஆரோக்கிய சாந்தாராணி, நகா்மன்ற உறுப்பினா் மகேஷ்குமாா், முன்னாள் உறுப்பினா் மோகன்ராஜ், வட்டாரத் தலைவா் காளீஸ்வரி, சேவாதள மாவட்ட துணைத் தலைவா் பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ராமேசுவரம்: ராமநாதபுரம் சென்டா் கிளாக் பகுதியில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் உருவப்படம் வைக்கப்பட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் பொறுப்புக்குழு உறுப்பினா் ராஜாராம் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதில், துணைத் தலைவா்கள் துல்கீப், கருப்பையா, சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவா் காஜா, நிா்வாகிகள் ராமலட்சுமி, கோபால், சித்திக்உசேன், வட்டாரத் தலைவா்கள் சேதுபாண்டி, கிருஷ்ணமூா்த்தி, நகரத் தலைவா் கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.