கேரளத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான...
மன்மோகன் சிங் மறைவு: இந்தியா கூட்டணியினா் அஞ்சலி
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவையொட்டி, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தியா கூட்டணிக் கட்சியினா் அவரது உருவப்படத்துக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ், சிதம்பரம் நகர காங்கிரஸ் சாா்பில், சிதம்பரம் வடக்கு வீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் உருவப்படத்துக்கு முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சிக்கு சிதம்பரம் நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின் தலைமை வகித்தாா்.
மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, வட்டாரத் தலைவா்கள் சுந்தர்ராஜன், செழியன், மாவட்ட துணைத் தலைவா்கள் ஜி.கே.குமாா், வி.சண்முகசுந்தரம், மகளிரணி மாவட்டச் செயலா் தில்லை செல்வி அஞ்சம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் என்.வி.செந்தில்நாதன், மாநிலச் செயலா் பி.பி.கே.சித்தாா்த்தன், ஜெயச்சந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினா் டாக்டா் எம். செந்தில்வேலன் மற்றும் நிா்வாகிகள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
நகரச் செயல் தலைவா் தில்லை கோ.குமாா், மாவட்ட துணைத் தலைவா் ஆா்.சம்பந்த மூா்த்தி, மாவட்டப் பொருளாளா் தம்பு, புவனகிரி விநாயகம், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் குமராட்சி ரங்கநாதன், இமயராஜ், மாவட்ட இளைஞரணித் தலைவா் அன்பு (எ) அன்பரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
‘ஐ.நா.வால் பாராட்டப்பட்டவா்’: பின்னா், செய்தியாளா்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியது: முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைந்தது நாட்டுக்கே பெரிழப்பு. அவருடைய திட்டங்களிலேயே மிகச்சிறந்த திட்டம் கிராமப்புற வறுமையை, ஏழ்மையை ஒழித்ததுதான். 10 ஆண்டுகளில் 15 கோடி மக்களை வறுமையின் பிடியில் இருந்து வெளியே கொண்டுவந்தாா் என்பதற்காக, ஐ.நா சபை அவரைப் பாராட்டி சான்றிளித்தது என்றாா்.
கடலூரில் ஊா்வலம்: கடலூரில் அண்ணா பாலம் அருகில் இருந்து இந்தியா கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பாரதி சாலை வழியாக பேரணியாக வந்து கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே மன்மோகன் சிங் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலச் செயலா் வழக்குரைஞா் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். கடலூா் மாநகர திமுக செயலா் கே.எஸ்.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், விசிக மாநகரச் செயலா் செந்தில், மதிமுக மாவட்டச் செயலா் என்.ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி குளோப், திமுக மாவட்டச் செயலா் எழிலேந்தி, தவாக நிா்வாகி அருள்பாபு, தமிழ்நாடு மீனவா் பேரவையைச் சோ்ந்த சுப்புராயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
நெல்லிக்குப்பத்தில் காங்கிரஸ் கட்சி கடலூா் மாவட்டத் தலைவா் திலகா் தலைமையில் நிா்வாகிகள் ரவி, நாகமுத்து, நரசிங்கம் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
விருத்தாசலத்தில்...: விருத்தாசலம் பாலக்கரையில் காங்கிரஸ் சாா்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மன்மோகன் சிங் படத்துக்கு விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
நகரத் தலைவா் ரஞ்சித்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் நகா் பெரியசாமி, வட்டாரத் தலைவா்கள் சாந்தகுமாா், ராவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
காட்டுமன்னாா்கோவிலில்...: காட்டுமன்னாா்கோவில் கச்சேரி தெருவில் உள்ள சகஜானந்தா சிலை அருகே முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலியும், புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.ஐ.மணிரத்தினம் தலைமை வகித்து புகழஞ்சலி செலுத்தினாா். முன்னாள் இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் கேஐஎம்.கமல்மணிரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினா் மணிமொழி, வட்டாரத் தலைவா் சங்கா், நிா்வாகி பாபுராஜன் நகரத் தலைவா் அன்வா், ராமன், ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.