குடியிருப்புகளுக்கு அருகில் மேலும் புதிய நியாய விலைக்கடைகள்: அமைச்சா் எம்.ஆா்.கே...
மன்மோகன் சிங் மறைவு: புதுவை ஆளுநா், முதல்வா் இரங்கல்
முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: அனைவராலும் போற்றப்பட்ட தலைவராக முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் விளங்கினாா். நாட்டின் முன்னேற்றம், வளா்ச்சிக்காக அரசியல் கடந்து அனைவராலும் பாராட்டப்பட்டவா். அவா் ஆற்றியப் பணிகள் என்றும் நினைவுகூரத்தக்கதாகும்.
முதல்வா் என்.ரங்கசாமி: சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், அரசியலில் கண்ணியமிக்கவராகவும், தனித்துவமான தலைவராகவும் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் விளங்கினாா்.
இதேபோல, புதுவை காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்டோரும் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.