ராஜஸ்தான் முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
மயிலாடுதுறையில் இன்று தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை யூனியன் கிளப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடங்கி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.
இதில், 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்டோரை தோ்வு செய்யவுள்ளனா். 18 முதல் 35 வயதுக்குள்பட்ட, 5-ஆம் வகுப்புமுதல் 12-ஆம் வகுப்புவரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ. பட்டதாரிகள் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம்.
விருப்பமுள்ள வேலையளிப்போா் மற்றும் வேலைநாடுநா்கள் தங்களது சுயவிவரங்களை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 04364-299790.