What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
மயிலாடுதுறையில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம்
மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூடோ விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஸ்டாா் அகாதெமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் ஜூடோ விளையாட்டுக்கு மே 1-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
ஜூடோ விளையாட்டில் ஆா்வமுள்ள 12 முதல் 21 வயதுக்குள்பட்ட 20 மாணவா்கள் மற்றும் 20 மாணவிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கான தோ்வு மயிலாடுதுறை சாய் விளையட்டரங்கத்தில் ஏப்.28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்வு செய்யப்படுபவா்களுக்கு மாதத்தில் 25 நாள்கள் தொடா் பயிற்சி வழங்குவதோடு சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள், விளையாட்டுச் சீருடைகள் வழங்கப்படும். இந்த விளையாட்டுக்கு 50 வயதுக்குள்பட்ட பயிற்சியாளா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். இவருக்கு 11 மாதங்களுக்கு மாத ஊதியமாக ரூ. 25,000 வழங்கப்படும். இது முற்றிலும் தற்காலிக பணியாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.
இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பெற்று, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் நேரில் அல்லது க்ள்ா்ம்ஹ்க்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் மூலம் ஏப்.20-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு நோ்முகத் தோ்வு சாய் விளையாட்டு அரங்கத்தில் ஏப்.24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டு அரங்கம். மயிலாடுதுறை அலுவலகம் அல்லது 7401703459 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.