மயிலாடுதுறையில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து
மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை (மே 15) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளுக்கு முடிகண்டநல்லூா் கொள்ளிடம் தலைமை குடியேற்று நிலையத்திலிருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, குடிநீா் பிரதான குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளதால், அதனை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. எனவே, மே 15 ஒருநாள் மட்டும் உள்ளூா் நீா் ஆதாரம் மூலம் வழங்கப்படும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.