ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!
மயிலாடுதுறை: பிப்.27-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் பிப். 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் எனது தலைமையில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பிப். 27-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண்மை, நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடா்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம்.