செய்திகள் :

மயில்சாமி மகனுடன் நடிக்கும் நடிகை பாடினி குமார்!

post image

புதிய வெப் தொடரில் யுவன் மயில்சாமியுடன் நடிகை பாடினி குமார் நடிக்கிறார்.

மறைந்த புகழ் பெற்ற காமெடி நடிகரான மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி. இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான தணியும் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

தொடர்ந்து, சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் என்ற படத்தில் பிரதான வேடத்தில் யுவன் நடித்திருந்தார். பா. ரஞ்சித் தயாரிப்பில் தண்டக்காரண்யம் என்ற படத்தில் யுவன் நடிக்கிறார்.

இதனிடையே, யுவன் மயில்சாமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தங்கமகள் என்ற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். இத்தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், விரைவில் தங்கமகள் தொடர் நிறைவடைகிறது.

இந்நிலையில், ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும் புதிய வெப் தொடரில் நடிகர் யுவன் மயில்சாமி நடிக்கிறார். இத்தொடரில் இவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடிக்கிறார்.

சின்ன திரையில் ஒளிபரப்பான நாயகி, திருமணம் தொடர்களில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் பாடினி குமார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் டேக் டைவெர்ஷன், சீசா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தொடர்ந்து, ஹார்ட்பீட் வெப் தொடரில் அனிதா பாத்திரத்தில் மருத்துவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இத்தொடரில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் இவர் உருவாக்கினார்.

தற்போது ஹார்ட்பீட் வெப் தொடரின் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து புதிய வெப் தொடரில் யுவன் மயில்சாமியுடன் பாடினி நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Actress Padini Kumar will star opposite Yuvan Mayilsamy in the new web series.

இதையும் படிக்க: காவல் துறை அதிகாரியாக நடிக்கும் கௌதம் ராம் கார்த்திக்?

பறந்து போ படத்தை எடுக்க இதுதான் காரணம்: இயக்குனர் ராம்

அனைவரும் சிரிக்க வேண்டும் என்று நினைத்துதான் பறந்து போ படத்தை எடுத்ததாக இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார். இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவா, பாலாஜி சக்திவேல் பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் ந... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி: வெளியீடு எப்போது?

விஜய் சேதுபதி நடித்துள்ள தலைவன் தலைவி படம் எப்போது வெளியாகும் என்ற தகவலை படக்குழு நாளை(ஜூன் 29) அறிவிக்கிறது.இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு நடிப்பில்... மேலும் பார்க்க

மெட்ராஸ் மேட்னி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

மெட்ராஸ் மேட்னி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’. இப்படம் திரையரங்குகளில்... மேலும் பார்க்க

எதிர்நீச்சல் தொடரை முந்திய அய்யனார் துணை: இந்த வார டிஆர்பி!

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் மருமகள் மற்றும் மூன்று முடிச்சு தொடர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. எதிர்நீச்சல் தொடரை அய்யனார் துணை சீரியல் முந்தியுள்ளது.சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள... மேலும் பார்க்க

இதயம் தொடரிலிருந்து விலகியது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு ஃபரினா பதில்!

இதயம் சீசன் 2 தொடரில் இருந்து விலகியது குறித்து விலகியது ஏன் என நடிகை ஃபரினா ஆசாத் விளக்கம் அளித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2023 முதல் ஒளிபரப்பாகி வரும் இதயம் சீரியலின் முதல்பாகம் கடந்த... மேலும் பார்க்க