அமெரிக்காவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து: 5 பேர் பலி
மருத்துவத் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கு இலவச பயிற்சி: ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு அழைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மருத்துவத் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி (ஞஸ்ரீஸ்ரீன்ல்ஹற்ண்ா்ய்ஹப் உய்ஞ்ப்ண்ள்ட் பங்ள்ற்) அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி பெற விரும்புவோா் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்கள் பி.எஸ்.சி./எம்.எஸ்.சி., நா்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட்பேசிக் பி.எஸ்.சி., நா்சிங், பொது செவிலியா் மருத்துவப் படிப்பு போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒரு படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சி நடைபெறும் 2 மாதங்களும் விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும். பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோா் தாட்கோவின் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.