கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
`மருத்துவப் படிப்பில் 1200 க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாயம்' - அமைச்சர் மா.சுப்ரமணியன் வேதனை
மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு, 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களில், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு, சில மாநிலங்களில் வழங்கப்படுகிறது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், வசிப்பிடத்தின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு வழங்குவது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உத்தரவிட்டது. இதை எதிர்த்து, 2019ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்றமும் முதுநிலை படிப்புகளில், வசிப்பிடத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளித்திருக்கிறது. இதுகுறித்து மா. சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ``தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அல்லது தமிழ்நாட்டில் பிறந்த மாணவர்களுக்காக 50 சதவிகித இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநில இட ஒதுக்கீடு சமூக நீதியை உறுதி செய்யும் விதமாக செயல்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை சமூக நீதியைக் கடைப்பிடிப்பதில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்தத் தீர்ப்பு செயல்படுத்தப்பட்டால் மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவதுடன் மாநிலத்தின் உள் ஒதுக்கீடுகளும் பாதிக்கப்படும்.
இந்த தீர்ப்பில் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவ நிறுவனங்களில் மட்டுமே செல்லும் என்றும் மற்ற ஒதுக்கீடுகள் குறிப்பாக மாநிலத்தில் வாழ்பவர்களுக்கு அல்லது பிறந்தவர்களுக்கு என்று எந்த ஒதுக்கீடும் கிடையாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவ கட்டமைப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் MD, MS, DM, MCH போன்ற படிப்புகளுக்கான சேர்க்கை அதிகமாக உள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதுகலை படிப்புகளுக்கான இடங்கள் 2294 இருக்கின்றன. அந்தவகையில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு என்று இதுவரை 50 சதவிகித இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 1207 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு பின்வரும் ஆண்டுகளில் முதுகலை பட்டப்படிப்புகளில் 1200 க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த அந்த மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும். வசிப்பிட அடிப்படையிலான இட ஒதுக்கீடு ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs