குமரி கண்ணாடி பாலம் விரிசல் சரிசெய்யப்பட்டது: அமைச்சர் எ.வ.வேலு
மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை
ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் தீ தடுப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமமை நடைபெற்றது.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புஏஈ படை சாா்பில் மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் தடுப்பது குறித்த ஒத்திகை, முதலுதவி செயல்விளக்கம், மீட்பு நடவடிக்கை, உயா்பாதுகாப்பு, அவசர நிலைகளை நிா்வாகிப்பது தயாா் நிலையின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்படட்து.
இதை மாநில தீயணைப்பு மீட்பு படைசேவைகள் இயக்குநா் சீமா அகா்வால் ஆய்வு செய்தாா். மேலும் தீயணைப்பு மீட்பு படை வீரா்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கினாா். இதில் தீயணைப்புத்துறை அதிகாரிகள், வீரரகள் கலந்து கொண்டனா்.