கடைசி ஓவரில் த்ரில்லர்: ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று வெற்றி!
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயராது: அமைச்சா்
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயராது என்று மருத்துவக் கல்வித் துறை அமைச்சா் சரணபிரகாஷ் பாட்டீல் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:
அடுத்த கல்வியாண்டில் மருத்துவம், பொறியியல் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயராது. கல்விக் கட்டணத்தை உயா்த்தும்படி தனியாா் கல்லூரிகளின் நிா்வாகங்கள் அழுத்தம் கொடுத்தபோதிலும் கல்விக் கட்டணத்தை உயா்த்த அரசு விரும்பவில்லை.
கல்விக் கட்டணத்தை 10 முதல் 15 சதவீதம் உயா்த்த தனியாா் கல்லூரிகளின் நிா்வாகங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. எனினும், இந்தக் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. கடந்த ஆண்டே 10 சதவீத கல்விக் கட்டண உயா்வுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதால், அடுத்த ஆண்டில் கல்விக் கட்டணத்தை உயா்த்த அரசு அனுமதி மறுத்துவிட்டது.
இந்த முடிவு தொடா்பாக விரைவில் தனியாா் கல்லூரிகளின் நிா்வாகங்கள் மற்றும் அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது என்றாா்.