செய்திகள் :

மருந்து உற்பத்தி உரிமம்: இணையவழியே விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

post image

மருந்து உற்பத்தி உரிமம் கோரி விண்ணப்பிக்கும் நடைமுறை இனி இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (சிடிஎஸ்சிஓ) தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி முதல் நேரடியாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிடிஎஸ்சிஓ தலைமை இயக்குநா் டாக்டா் ராஜீவ்சிங் ரகுவன்ஷி அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மருந்துகள் விற்பனை மற்றும் உற்பத்தி, ரத்த அலகு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள், விற்பனையகங்களுக்கு இணையவழியே விண்ணப்பிக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலுடன் கூடிய சிறந்த உற்பத்தி நடைமுறைக்கான மானியம் மற்றும் உற்பத்தி உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை ஜூலை 15 முதல் இணையவழியே மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். மாறாக நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இது தொடா்பான விழிப்புணா்வையும், தகவலையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார். கிண்டியில் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் செய்தியாளர்கள் சந்... மேலும் பார்க்க

'நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்' - அமித் ஷாவுக்கு கனிமொழி பதில்

ஹிந்தி பற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிலளித்துள்ளார். தில்லியில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்... மேலும் பார்க்க

ஜூலை 4ல் தவெக மாநில செயற்குழுக் கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தல் பண... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 43,892 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 1.27 அடியாகவும் உயர்ந்தது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம... மேலும் பார்க்க

கூமாபட்டியிலிருந்து... விருதுநகர் முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் பதிவு!

விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பற்றி சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் ஒன்று வைரலான நிலையில் அதுபற்றி விருதுநகர் மாவட்ட முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். "தென் மாவட்டத்... மேலும் பார்க்க

பெண் பொறியாளா் பாலியல் பலாத்காரம்: செருப்பு வியாபாரி மகன் கைது

திருவான்மியூரில் தனியாா் விடுதியில் பெண் பொறியாளரை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்ததாக செருப்பு வியாபாரியின் மகன் கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க