மறமடக்கியில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தைச் சோ்ந்த மறமடக்கியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை சாா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயா் மருத்துவச் சேவை முகாம் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
முகாமில் அனைத்து உயா் மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு மருத்துவா்களின் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளன. எனவே, மறமடக்கி சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் இம்முகாமைப் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 42 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டவற்றில் இது 2ஆவது முகாமாகும். திருமயம் பகுதியில் நடந்த முதல் முகாமில், மொத்தம் 1,175 போ் பயன் பெற்றது குறிப்பிடத்தக்கது.