திருமணத்தில் தகராறு; மீசை, தலை முடியை வெட்டிய குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் அபராத...
மறுவெளியீடான பத்மாவத்..!அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் குறித்து பேசிய ரன்வீர் சிங்!
தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடிப்பில் 2018இல் பத்மாவத் (தமிழில் பத்மாவதி) படம் வெளியானது. தற்போது, இந்தப் படம் மறுவெளியீடாகியுள்ளது.
இந்தப் படத்தை பிரபல ஹிந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருந்தார். இந்தப் படத்துக்கு வட மாநிலங்களில் பல எதிர்ப்புகள் கிளம்பி அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து தாமதமாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
கி.பி.1303ஆம் ஆண்டில் இருந்த ராணி பத்மாவதியின் கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோன் சிறப்பாக நடித்திருந்தார்.
சித்தூர் ராணி பத்மினியின் அழகில் மயங்கிய அலாவுதீன் கில்ஜி, அவளைக் கவர நினைத்து சித்தூரின் மீது படையெடுத்து கோட்டையை முற்றுகை இட்ட நிலையில் ராணி பத்மினி, தனது அந்தப்புரத்துப் பெண்கள் அனைவருடனும் கில்ஜியின் கண் முன்னே நெருப்பில் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்வதுதான் கதை.
அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் அசத்தியிருந்தார். கடினமான ஒரு வரலாற்று கதாபாத்திரத்தை அதன் தீவிரத் தன்மைக் குறையாமல் நடிக்க கடினமாக உழைத்ததாகக் கூறியுள்ளார்.
கதைதான் எனக்கு புத்தகம்
ரன்வீர் சிங் கூறியதாவது:
நடிகரான நான் திரைக்கதைக்கு உண்மையாக இருக்க வேண்டும். திரைக்கதையை நான் பாடப்புத்தகமாக கருதுகிறேன். என்ன எழுதி இருக்கிறதோ அதில் இருந்துதான் நான் குறிப்புகளை அதிகமாக எடுத்துக்கொள்கிறேன்.
உண்மையை சொல்ல வேண்டுமானால், கில்ஜி கதாபாத்திரத்தில் நான் இன்னமும் தீவிரமான, உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தும்படி நடிக்க விரும்பினேன். இயக்குநர் பன்சாலி கில்ஜி கதாபாத்திரத்துக்காக என்னை சிறப்பாக வடிவமைத்தார் என்றார்.
கடைசியாக ரன்வீர் சிங் ‘சிங்கம் அகெய்ன்’ படத்தில் நடித்திருந்தார். இதற்கடுத்து துரந்தார் எனும் படத்தில் நடித்து வருகிறார்.