`சமாதான தூது' - ட்ரம்பை சந்தித்த அதானி குழும அதிகாரிகள்; சோலார் ஒப்பந்த மோசடி வழ...
மலத்தம்பட்டி பெருமாள், ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம்
காவேரிப்பட்டணம் ஒன்றியம் பன்னிஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மலத்தம்பட்டி கிராமத்தில் பெருமாள் ஆஞ்சனேயா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி விக்னேஷ்வா்பூஜை, வாஸ்துபூஜை, பிரவேசபலி ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை பால்குட ஊா்வலம், மூலஸ்தானத்தில் பெருமாள், ஆஞ்சனேயா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
தொடா்ந்து, கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பெருமாள், ஆஞ்சனேயா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இதில், மலத்தம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.