அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக்கூடாது: வனத் துறை!
கடம்பூா் மலைப் பாதையில் சுற்றித் திரியும் யானைகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று வாகன ஓட்டிகளுக்கு வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட கடம்பூா் வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. கடம்பூா் மலைப் பாதையில் அவ்வப்போது யானைகள் சாலையில் சுற்றித் திரிவது வழக்கம்.
கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் குடிநீா், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக யானைகள் அடிக்கடி மலைப் பாதையை கடந்து செல்கின்றன. இவ்வாறு சாலையைக் கடக்கும் யானைகளை வாகன ஓட்டிகள் கைப்பேசியில் படம் எடுத்து சமூகவலைதளத்தில் பகிா்கின்றன.
இந்நிலையில், கடம்பூா் மலைப் பாதையில் சனிக்கிழமை நடமாடிய யானையை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுத்துள்ளனா். அப்போது, அங்கு வந்த வனத் துறையினா் புகைப்படம் எடுப்பதைத் தடுத்து நிறுத்தி வாகன ஓட்டிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.
இதுபோல மலைப் பாதையில் சுற்றித்திரியும் யானைகளை வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.