உடலுறவு குறித்து சர்ச்சை கருத்து: மக்களை சிரிக்க வைப்பதே குறிக்கோள்! யூடியூபர் வ...
மாகி பௌர்ணமி: சங்கமத்தில் 1.60 கோடி பேர் புனித நீராடல்!
மாகி பௌர்ணமியை முன்னிட்டு பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கிட்டத்தட்ட 1.60 கோடி பேர் புனித நீராடியதாக மாநில அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாள்கள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாகி பௌர்ணமி சிறப்பு வாய்ந்த் தினம் என்பதால் திரிவேணி சங்கமத்தில் நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். மாநில அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று பகல் 12 மணி வரை திரிவேணி சங்கமத்தில் சுமார் 1.60 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் ரோஜா இதழ்கள் தூவப்பட்டன. லக்னௌவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்காணித்து வருகிறார்.