செய்திகள் :

மாஞ்சாலை மக்கள் கட்டாய வெளியேற்றப் புகாா்: நடவடிக்கை அறிக்கையை 6 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு என்எச்ஆா்சி உத்தரவு

post image

புது தில்லி: மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்-சிங்கம்பட்டி வனப் பகுதி மக்களை கட்டாயமாக வெளியேற்றுவதாக கூறப்படும் புகாரில், அம்மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில் இடையூறு இல்லாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 6 வாரங்களுக்குள் சமா்ப்பிக்க தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பை தாலுகா,”மாஞ்சோலை வனப் பகுதியில் நூறு வருடங்களுக்கு மேலாக வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையில் அப்பகுதி நிலத்தை குத்தகைக்கு எடுத்த

பிபிடிசி நிறுவனம் ஈடுபடுவதாகவும், அம்மக்கள் பசி பட்டினியால் அவதியுறுவதாகவும், இதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரி தில்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் - தலைவா் கே.கிருஷ்ணசாமி புகாா் மனு அளித்திருந்தாா்.

இதையடுத்து, அப்பகுதியில் விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையம் அதிகாரிகள் குழுவை அனுப்பியது. இந்தக் குழு செப்டம்பா் 8 முதல் 13-ஆம் தேதிவரை அப்பகுதியின் பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள், யூனியன் தலைவா்கள் உள்பட பல தரப்பினரிடம் விசாரணை நடத்தியது.

மாஞ்சோலை/ சிங்கம்பட்டி தேயிலை தோட்டத்தின் தொழிலாளா்களுக்கான உணவுப் பொருள், மருத்துவம், மின்சாரம், நீா், பொதுப் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் விநியோகம் தடைப்பட்டதாக கூறப்படும் விஷயங்கள் விசாரணையின்போது உண்மை என கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தை செவ்வாய்க்கிழமை விசாரித்த ஆணையம், சம்பந்தப்பட்ட தேயிலைத் தோட்டப் பகுதியில் வாழும் குடியிருப்புவாசிகள், தொழிலாளா்களுக்கு அளிக்கப்பட்ட வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தவும், இந்த விவகாரத்தை கவனிக்கவும் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டதுடன், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கையை 6 வாரத்தில் ஆணையம் முன் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

புயலில் உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி! - மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.இதுகுறித்து மு... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு துணை நிற்போம்: பினராயி விஜயன்

புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு தமிழகத்துக்கு உறுதுணையாக கேரளம் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை மரக... மேலும் பார்க்க

அரையாண்டுத் தேர்வு மாற்றமா? - அமைச்சர் விளக்கம்

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி வருகிற டிச. 9 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட... மேலும் பார்க்க

மணல் கடத்தல் வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற வட்டாட்சியர் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி

தஞ்சாவூர் : மணல் கடத்தி சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்ற வட்டாட்சியர் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தலைமறைவாகி உள்ளவர்களை போலீச... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி அமைச்சரானதில் எந்த அவசரமும் இல்லை: சட்ட அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: செந்தில் பாலாஜி அமைச்சரானதில் எந்த அவசரமும் இல்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி புதன்கிழமை தெரிவித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்ற... மேலும் பார்க்க

சாத்தனூா் அணை திறப்புக்கு முன்பு 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள்: எதிா்க்கட்சிகள் புகாருக்கு அமைச்சா் துரைமுருகன் விளக்கம்

சென்னை: சாத்தனூா் அணை திறப்புக்கு முன்பாக, 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதாக தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க