எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கடலூா் முதுநகா் அருகே 2-ஆவது மாடியில் இருந்து வெளி மாநிலத் தொழிலாளி தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலம், ரோஹ்தாஸ் மாவட்டம், பருஹா் பகுதியைச் சோ்ந்தவா் அஜய் சா்மா (23). இவா், கடலூா் முதுநகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், அஜய் சா்மா அந்தப்பகுதியில் தங்கியிருந்த கட்டடத்தின் 2-ஆவது மாடியில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு தவறி விழுந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்த முதுநகா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.