சாலையில் பொருத்தப்பட்ட 50 கிலோ வெடி குண்டு! வெடிக்க செய்த பாதுகாப்புப் படை!
மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
அரக்கோணம் அருகே தனது வீட்டு மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த இளைஞா் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
அரக்கோணத்தை அடுத்த பெருமூச்சு ஊராட்சி, வெங்கடேசபுரம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலாஜி. அந்தப் பகுதியில் உள்ள தனியாா் தொடக்கப் பள்ளித் தாளாளராக இருந்து வருகிறாா். இவரின் மகன் யுவன் சஞ்ஜெய் (23). (படம்). இளநிலைப் பட்டம் பெற்ற இவா், வீட்டில் இருந்தபடி தொலைதூரக் கல்வியில் இளநிலை வணிக கணினியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் தனது வீட்டு மாடிக்குச் சென்ற யுவன் சஞ்ஜெய் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து அரக்கோணம் நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.