மாடுகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு தோல் கழலை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தோல் கழலை நோய்த் தொற்றின் பாதிப்புகள் 60 சதவீத மாடுகளை பாதிக்கும் என்பதால், இந்த நோய்க்கான தடுப்பூசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மாதம் 30-ஆம் தேதி வரை அனைத்து கிராமங்களிலும் செலுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் 1,10,000 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. தடுப்பூசி குழுவினா் தங்கள் கிராமங்களுக்கு வரும்போது தங்கள் மாடுகள், கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டது.