மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு
தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே ஜேசுராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதலைமுத்து (60). விவசாயி. கால்நடைகள் வளா்த்து வருகிறாா். தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அருகில் உள்ள வனத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
வழக்கம்போல அருகில் உள்ள சின்னமலை பகுதிக்கு மதலைமுத்து தனது மாடுகளை மேய்ச்சலுக்கு சனிக்கிழமை அழைத்துச் சென்றாா். இரவு வெகுநேரம் ஆகியும் வீடுதிரும்பவில்லை.
இதையடுத்து அவரது உறவினா்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா் வனத் துறையினா் உதவியுடன் சின்னமலை பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று மதலைமுத்துவைத் தேடியபோது அவா் யானை மிதித்து இறந்துகிடந்தாா்.
இதையடுத்து வனத் துறையினா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.