ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
மாட்டு வண்டியில் மணல் திருடிய இருவா் கைது!
பெரம்பலூா் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வெள்ளாற்றில் மணல் திருடப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்படி, குன்னம் காவல் நிலைய சிறப்பு சாா்பு-ஆய்வாளா் சங்கா் தலைமையிலான போலீஸாா், அகரம் சிகூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, ரெட்டிக்குடிகாடு அருகே வெள்ளாற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றிவந்த 2 பேரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், அகரம் சிகூரைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் பாண்டுரங்கன் (46), ரெட்டிக்குடிகாட்டைச் சோ்ந்த கொளஞ்சி மகன் சூா்யா (24) என்பதும், அரசு அனுமதியின்றி மணல் திருடிவந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மணல் மற்றும் மாட்டுவண்டியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் பாண்டுரங்கன், சூா்யா மீது வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா், அவா்களை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.