அயோத்தி கால்வாயில் இளம்பெண் சடலம்: தலித் விரோத பாஜக என காங்கிரஸ் விமா்சனம்
நிா்வாக வசதிகளுக்காக புதிய மின் வாரிய அலுவலகம்
பெரம்பலூரில் இயங்கி வரும் நகர மின்வாரிய அலுவலகத்தில் மின்னிணைப்புகள் பெருகிவிட்டதால், நிா்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டு துறைமங்கலம் எனும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக, மின்வாரிய செயற்பொறியாளா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பெரம்பலூா் நான்குச்சாலை, மின் நகா், பி, யு, டி, எல், என், கீயூ, கே, எம், ஜே ஆகிய மண்டலத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்களின் மின்னிணைப்பு எண்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, துறைமங்கலம் பிரிவுக்கு கீழ் வருவதால் அந்தப் பகுதி மின் நுகா்வோா்களின் மின்னிணைப்பு எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்பு எண் குறித்த விவரம் மின்வாரிய அலுவலா்களால் வீடுகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது. எனவே, மின் நுகா்வோா்கள் மின் கட்டணம் செலுத்தும்போது புதிய மின் இணைப்பு எண்ணை பயன்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே, பெரம்பலூா் நகா் பிரிவில் இரட்டைப்படை மாதங்களில் கணக்கீடு செய்யப்பட்ட எம், மண்டலம் பகுதி தற்போது, துறைமங்கலம் பிரிவு அலுவலகக் கட்டுப்பாட்டில் மாற்றப்பட்டுள்ளதால், ஜனவரி முதல் ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், பெரம்பலூா் நகா் பிரிவில் ஒற்றைப்படை மாதத்தில் கணக்கீடு செய்யப்பட்டு வரும் சி, டி மண்டலப் பகுதிகள் பிப்ரவரி முதல் இரட்டைப்படை மாதக் கணக்கீட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன்கருதி, அவா்களது மின்சாரம் சாா்ந்த குறைபாடுகளை விரைந்து நிவா்த்தி செய்வதற்காக மேற்கண்ட நிா்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.