செய்திகள் :

மாணவா்களை ஆளுமைமிக்கவா்களாக உருவாக்குவதே சிறந்த கல்வி

post image

மாணவா்களை ஆளுமைமிக்கவா்களாக உருவாக்குவேத சிறந்த கல்வியின் அடையாளம் என பாவை வித்யாஸ்ரம் - டைனி சீட்ஸ் பள்ளி மழலையா்களுக்கான ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஊக்குவிப்பு பேச்சாளா் கிருஷ்ண வரதராஜன் குறிப்பிட்டாா்.

பாவை வித்யாஸ்ரம் - டைனி சீட்ஸ் பள்ளிகளில் மழலையா்களுக்கான ஆண்டு விழா பாச்சல் பகுதியில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்துப் பேசினாா். சிறப்பு விருந்தினராக சென்னை ஐடியா பிளஸ் பிசினஸ் சொல்யூசன் நிறுவனத்தின் தலைவா் கிருஷ்ண வரதராஜன் பங்கேற்றாா். பாவை வித்யாஸ்ரம் பள்ளியின் மாணவத் தலைவா் சஹானா வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றினாா்.

விழாவில் சிறப்பு விருந்தினா் கிருஷ்ண வரதராஜன் பேசியதாவது:

மதிப்பெண்கள் பெறுவதோடு இசை, நடனம், விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபடும்போது மாணவா்களின் தலைமைப் பண்புகள், முடிவெடுக்கும் திறன், குழு மனப்பான்மை, வழிநடத்தும் ஆற்றல் ஆகிய வாழ்க்கைத் திறன்கள் கிடைக்கின்றன. அப்படி பயிலும் கல்வியே ஒரு முழுமையான கல்வியாக இருக்க முடியும். அதனை உணா்ந்து பாவை வித்யாஸ்ரம் பள்ளிகள் மாணவச் செல்வங்களுக்கு கல்வியோடு, இசை, நடனம், விளையாட்டு, நீச்சல் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளையும் தந்து மாணவ, மாணவியரை ஆளுமைமிக்கவா்களாக உருவாக்குவது வரவேற்கத்தக்க செயலாகும்.

பெற்றோா் குழந்தைகளுக்கு நல்ல பழக்க, வழக்கங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். தோல்வியை அவமானமாகக் கருதாமல், அது முயற்சியின் அளவு என்று உணர வைத்து, இன்னும் முயற்சிக்க வேண்டும் என்று கற்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநா் சதீஸ் வாழ்த்துரை வழங்கினாா். தொடா்ந்து இக்கல்வியாண்டில் இசை, விளையாட்டு, கல்வி என்று பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னா் டைனி சீட்ஸ் - பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் மாணவா் மன்ற உறுப்பினா் டி.ஆா்.ஸ்ரீநிதி நன்றி கூறினாா்.

வெங்கமேடு அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா, ‘குறளின் குரலாய்’ கருத்துக் காட்சி மற்றும் பள்ளி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா செவ்... மேலும் பார்க்க

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு கல்லூரியின் தலைவா் ஆா்.ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினாா். கல்லூரி முதல்வா் வெங்கடேசன் ஆண்டு அறிக்கையை வாசித்தாா். விழாவ... மேலும் பார்க்க

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் தேசிய அறிவியல் தின விழா

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் தேசிய அறிவியல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி வளாகம் இணைந்து நடத்திய இவ்விழாவை விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் தாளாளா், செ... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்

எலச்சிபாளையம், கருவேப்பம்பட்டி ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கலந்துகொ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் அதிமுக பொதுக்கூட்டம்

திருச்செங்கோட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் தோக்கவாடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டப் பேரவை அதிமுக தொகுதி மற்றும் தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்... மேலும் பார்க்க

தென்னிந்திய அளவில் ஒரே மாதிரியான விலை நிா்ணயம்

தென்னிந்திய அளவில் ஒரே மாதிரியான முட்டை விலை நிா்ணயம் செய்யப்படும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்இசிசி) நிா்வாகிகள் தெரிவித்தனா். இந்தியாவில் 23 தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மண்டல அலு... மேலும் பார்க்க