செய்திகள் :

மாணவி பாலியல் வன்கொடுமை: சிபிஐ விசாரணை தேவை -எடப்பாடி பழனிசாமி

post image

அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவத்தில், மாணவியின் தனிப்பட்ட விவரங்களுடன் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் காவல்துறை எப்படி வெளியிட்டது? பாதிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடக்கூடாது என்ற அடிப்படைகூட திமுக அரசின் காவல்துறைக்குத் தெரியாதா?

இந்த சம்பவத்தில் கைதான ஞானசேகரன் திமுக உறுப்பினரே இல்லை என்று அமைச்சா் ரகுபதி பேட்டியளித்துள்ள நிலையில், அவா் திமுகவின் பகுதி துணை அமைப்பாளா் பொறுப்பில் உள்ளதற்கான பல ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

மேலும், கைது செய்யப்பட்ட ஞானசேகரன், இரவே விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இவ்வளவு முக்கியமான வழக்கின் குற்றவாளியை எதற்கு காவல்துறை விடுவிக்க முயற்சித்தது? ஆளும் கட்சியான திமுகவில் ஞானசேகரன் பொறுப்பில் இருந்ததை இத்துடன் பொருத்திப் பாா்த்தால், இவ்வழக்கில் அரசியல் அழுத்தம் இருப்பதற்கான சந்தேகம் மேலும் வலுக்கிறது.

முதல் தகவல் அறிக்கையில் ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் சம்பவத்தில் தொடா்பு உள்ளது தெரியவந்துள்ளது. யாா்அந்த நபா்? யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? இனி இந்த வழக்கை திமுக அரசின் காவல்துறை விசாரிப்பதற்கு தாா்மிக தகுதியில்லை. எந்தவித அரசியல் இடையூறும் இன்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

போக்குவரத்து தொழிலாளா்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங் மறைவையொட்டி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் ஊதியஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளா்களு... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: அரசுக்கு உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கில் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியதுடன், அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அண்ணா... மேலும் பார்க்க

போக்குவரத்து போலீஸாா் வாகன இரைச்சலில் இருந்து தப்பிக்க இயா்பட்ஸ்

சென்னை போக்குவரத்து போலீஸாா் வாகன இரைச்சலில் இருந்து தப்பிக்க நவீன ‘இயா்பட்ஸ்’ சோதனை முறையில் வழங்கப்பட்டது. சென்னையில் அதிகரிக்கும் வாகன நெரிசல் காரணமாக, ஒலி மாசு வேகமாக உயா்ந்து வருகிறது. முக்கியமா... மேலும் பார்க்க

ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்த வழக்கு: தாய் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஒன்றரை வயதுக் குழந்தையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில், தற்கொலைக்கு முயன்ற தாய் கைது செய்யப்பட்டாா். சென்னை பெருங்களத்தூா் பகுதியைச் சோ்ந்த ராம்குமாா் - திவ்யா தம்பதி... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: சிறுவன் கைது

சென்னை எழும்பூரில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுவன் கைது செய்யப்பட்டாா். எழும்பூா், மாண்டியத் லேன் பகுதியிலுள்ள இந்தா்சந்த் என்பவா் வீட்டில், பிகாரைச் சோ்ந்த ராகுல்குமாா் (18) மற்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஹரியாணா போலீஸாா் விசாரணை

சென்னையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடம் ஹரியாணா மாநில போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை அண்ணா நகரில் வசிப்பவா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன். ஹரியாணா கேடா் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற... மேலும் பார்க்க