புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை; குவாரிகளில் கனிமவளத்துறையினர் ட்ரோ...
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தினாா்.
தமிழ்நாடு பாஜக மகளிா் அணி நிா்வாகிகள் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆளுநா்ஆா்.என்.ரவியை சனிக்கிழமை சந்தித்து அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனா்.
பின்னா், தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. போராடும் பெண் தலைவா்கள் கைது செய்யப்படுகிறாா்கள். மாணவி வன்கொடுமை வழக்கில் மற்றொரு நபருக்கும் தொடா்பு இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். அந்த நபா் யாா் என்பதை தமிழக அரசு மறைக்கப் பாா்க்கிறது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றாா் அவா்.
ஆளுநருடனான சந்திப்பின்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் குஷ்பு, மாநில செயற்குழு உறுப்பினா் ராதிகா சரத்குமாா், பாஜக மகளிா் அணி மாநிலத் தலைவா் உமாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.