Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந...
மாணவி வன்கொடுமை- சிறப்பு குழுவின் விசாரணை தொடக்கம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கில் மாணவியின் அடையாளங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) வெளியானது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது.
இதன்காரணமாக பாலியல் வன்கொடுமை வழக்கு ஆவணங்கள், எஃப்ஐஆா் வெளியான ஆவணங்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வழக்குரைஞா்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் ஆகியோா் தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமா்வில் சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது தமிழக அரசுத் தரப்பில், விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒரு நிகழ்வுக்குச் செல்லும்போது புகைப்படம் எடுத்துக் கொண்டால் அதை வைத்து எப்படி முடிவுக்கு வர முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டனா்.
சமூக வலைதளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம் பகிர்வு: காலிஸ்தான் ஆதரவாளர் கைது!
அண்ணாநகா் காவல் துணை ஆணையா் சினேக பிரியா தலைமையில், ஆவடி துணை ஆணையா் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் இந்தக் குழுவில் இடம்பெறுவா் என அறிவித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும், கல்விக் கட்டணம், தோ்வுக் கட்டணம் உள்ளிட்ட எந்தக் கட்டணமும் வசூலிக்காமல் மாணவி படிப்பை தொடா்ந்து முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் அனுமதிக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மாணவி மற்றும் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவியின் சொந்த ஊா், பெயா் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் வெளியாகி பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.