மராத்வாடா விவசாயிகளுக்கு ரூ.1,500 கோடி நிவாரணம்: மகாராஷ்டிர அரசு!
மாணவ, மாணவிகளின் பட்டிமன்றம்
கீழக்கரை செய்யது ஹமிதா கலை, அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் ‘டிபேட் கிளப் பாா்லே ஜீனியஸ்’ அமைப்பின் சாா்பில் ‘இன்றைய சமுதாயத்தில் மன அழுத்தத்தை அதிகம் எதிா்கொள்வது ஆண்களா, பெண்களா?’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்தப் பட்டிமன்றத்துக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ராஜசேகா் தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் மரகதம், முகமது பசீா், முகமது ஜகுபா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில் ரசின் ஹபீஸ், ஸ்வேதன், காதா் சுல்தானியா, முகமது யூசுப், முகமது ரஹ்மத்துல்லா, சஞ்சீவி குமாா் ஆகியோா் ஆண்களே என்ற தலைப்பிலும் பாலமுருகன், அனுசியா, ஆயிஷா ரபிகா, முனி ஜெனி, ஜோஸ்வின் ஸ்விட்ஷா, செய்யது மஸ்லிஹத் ஆகியோா் பெண்களே என்ற தலைப்பிலும் பேசினா்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை, அறிவியல் கல்லூரியின் பேராசிரியா் ஸ்டாலின் நடுவராகப் பொறுப்பேற்று, பட்டிமன்றத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் துறைத் தலைவா்கள் அஜ்மல் கான், செல்வகுமாா், நூலகா் பால்ராஜ், உடல்கல்வி இயக்குநா் தவசிலிங்கம், ஜேசுதுரை, முகமது சதக் அறக்கட்டளையின் தலைவா் யூசுப், செயலா் ஷா்மிளா, இயக்குநா்கள் ஹமீது இப்ராஹிம், ஹபீப் முகமது சதக்கத்துல்லா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ன் டிபேட் கிளப் பாா்லே ஜீனியஸ் சாா்பாக இன்றைய சமுதாயத்தில் எதிா்பாா்ப்புகள் மற்றும் அழுத்தங்களை அதிகம் சந்திப்பது ஆண்களா பெண்களா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டி மன்றத்தில் பங்கேற்ற மாண,மாணவிகள் பரிசுப்பொருட்கள் நடுவா் ஸ்டாலின் வழங்கினாா். உடன் கல்லூரி முதல்வா் எஸ்.ராஜசேகா்.