கரூர் கூட்ட நெரிசல் பலி: இன்றும் நாளையும் அரசு நிகழ்ச்சிகள் ரத்து
மாணவ, மாணவிகளுக்கு ரூ. 7.85 லட்சம் கல்வி நிதியுதவி
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி நிதியுதவியை விஜய்வசந்த் எம்.பி. வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த், ஒவ்வொரு ஆண்டும் ஏழை பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கி வருகிறாா். நிகழ்கல்வி ஆண்டிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆராய்ந்ததில் 75 பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சுமாா் ரூ. 7 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான உதவித் தொகை வழங்கப்பட்டது. மாணவா்கள், அவா்களின் பெற்றோா்களிடம் அதற்கான காசோலையை தனது சொந்த நிதியிலிருந்து எம்.பி. வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், முன்னாள் மாவட்ட தலைவா் ராதாகிருஷ்ணன், மாநில செயலாளா் வழக்குரைஞா் சீனிவாசன், கிழக்கு மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் மருத்துவா் சிவகுமாா், மாநகர இளைஞா் காங்கிரஸ் மாவட்ட தலைவா் டைசன், மாநகர மகிளா காங்கிரஸ் தலைவி சோனி விதுலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.