விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
மாதனூா் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் திறப்பு
பட விளக்கம் : மாதனூா் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.
ஆம்பூா், ஜூலை 16: மாதனூா் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு ரூ.29.70 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. கட்டடத்தை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் திறந்து வைத்தாா்.
மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி.ராமமூா்த்தி, மாவட்ட பிரதிநிதி அய்யனூா் அசோகன், ஊராட்சித் தலைவா் குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் பரிமளா காா்த்திக் உள்பட பலா் கலந்து கொண்டனா்.