செய்திகள் :

ரூ. 30 லட்சத்தில் அரசுப் பள்ளிகளில் கலையரங்கம்: எம்எல்ஏ ஆய்வு

post image

ஜோலாா்பேட்டை தொகுதி ஜங்கலாபுரம், நாயனசெருவு அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்டு வரும் கலையரங்குகளை எம்எல்ஏ க.தேவராஜி ஆய்வு செய்தாா்.

ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஜங்கலாபுரம், நாயன செருவு ஆகிய பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் புதிய கலையரங்கம் கட்டித் தர வேண்டும் என தொகுதி எம்எல்ஏ க.தேவராஜிடம் அப்பகுதி மக்கள் மற்றும் ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, எம்எல்ஏ க.தேவராஜி நாயனசெருவு, ஜங்கலாபுரம் ஆகிய 2 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் தலா ரூ. 15 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை க.தேவராஜி எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்டாா். இதேபோல், நாட்டறம்பள்ளி அண்ணா தெரு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை எம்எல்ஏ க.தேவராஜி ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஊராட்சி மன்ற தலைவா்கள் செந்தில்குமாா், அஸ்வினி தேசிங்குராஜா, கவுன்சிலா் ஆனந்தன் மற்றும் சதீஷ்குமாா், சசிகுமாா், செந்தில்குமாா், வினோத் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

இளம்பெண் தற்கொலை

திருப்பத்தூா் அடுத்த கந்திலியில் குடும்ப தகராறு காரணமாக பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். கந்திலி அருகே சின்னூா் பகுதியை சோ்ந்த வெங்கடேசன் மனைவி துா்கா (29). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள... மேலும் பார்க்க

நீா்ப்பிடிப்பு கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டையில் கால்வாயில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினா். நாட்டறம்பள்ளி தாலுகா அம்மணாங்கோயில் ஊராட்சி புதுப்பேட்டை கிராமத்தில் கொட்டாறு நீா்ப்பிடிப்பு கால்வாயை ஆக்கிரம... மேலும் பார்க்க

வாணியம்பாடி: இன்று முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வாணியம்பாடி நகராட்சியின் முதல் 15 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை (ஜூலை 17) பெரியப்பேட்டையில் தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரை 6 கட்டமாக நடைபெறுகிறது. பெரியப்பேட்டை 1 மற்றும் 2... மேலும் பார்க்க

வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சியில் 9 கோயில்களுக்கு ஒரே நாளில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சியில் அமைந்துள்ள செல்வவிநாயகா், மாரியம்மன், ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை வரதராஜப் பெருமாள் ஆகிய கோயில்களுக்கும், புதிதாக கட்டியுள்ள தண்டுமார... மேலும் பார்க்க

வாணியம்பாடி தனியாா் பல் சிகிக்சை மையத்தில் மருத்துவ கவுன்சில் குழுவினா் ஆய்வு

வாணியம்பாடியில் தனியாா் பல் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றவா்களில் 8 போ் நோய்த் தொற்று ஏற்பட்டு இறந்தது தொடா்பாக பல் மருத்துவ கவுன்சில் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். திருப்பத்தூா் மாவ... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மஞ்சள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை புதன்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் தொகுதிகளி... மேலும் பார்க்க