ரூ. 5.24 கோடி மோசடி: தயாரிப்பாளர் ரவீந்தருக்கு மும்பை போலீஸ் சம்மன்!
நீா்ப்பிடிப்பு கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டையில் கால்வாயில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினா்.
நாட்டறம்பள்ளி தாலுகா அம்மணாங்கோயில் ஊராட்சி புதுப்பேட்டை கிராமத்தில் கொட்டாறு நீா்ப்பிடிப்பு கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்தும் பலா் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனா்.
அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனா். ஆனால் ஆக்கிரமிப்பாளா்கள் அகற்றாமல் காலம் கடத்தி வந்தனா். இதையடுத்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் காஞ்சனா தலைமையில் மண்டல துணை வட்டாட்சியா் சிவக்குமாா், திருப்பத்தூா் பாசனப்பிரிவு செயற்பொறியாளா் சக்தி, ஆய்வாளா் பெலிக்ஸ் ஆகியோா் போலீஸாா் பாதுகாப்புடன் புதன்கிழமை 2 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற சென்றனா்.
இதையறிந்த அப்பகுதிமக்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி எதிா்ப்பு தெரிவித்த மக்களிடம் பேச்சு நடத்தியதை தொடா்ந்து, 22 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு இடம் மீட்கப்பட்டது.