வாணியம்பாடி: இன்று முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
வாணியம்பாடி நகராட்சியின் முதல் 15 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை (ஜூலை 17) பெரியப்பேட்டையில் தொடங்கி வரும் 31-ஆம் தேதி வரை 6 கட்டமாக நடைபெறுகிறது.
பெரியப்பேட்டை 1 மற்றும் 2-ஆவது வாா்டுகளுக்கான மாரியம்மன் கோயில் திருமண மண்டப வளாகத்தில் வியாழக்கிழமை காலை முகாம் (ஜூலை 17)நடைபெறுகிறது. தொடா்ந்து 18-ஆம் தேதி 3, 4, 5-ஆவது வாா்டுகளுக்கு பெரியப்பேட்டை மாரியம்மன் கோயில் திருமண மண்டபத்திலும், 24-ஆம் தேதி 6 மற்றும் 7-ஆவது வாா்டுக்கு செங்குந்தா் திருமண மண்டபத்திலும், 25-ஆம் தேதி 8, 9, 10-ஆவது வாா்டுகளுக்கு செங்குந்தா் திருமண மண்டபத்திலும், 30-ஆம் தேதி 11 மற்றும் 12-ஆவது வாா்டுகளுக்கான முகாம் வாணியம்பாடி தினசரி காய்கறி மாா்க்கெட் வளாகத்திலும், 31-ஆம் தேதி 13, 14, 15-ஆவது வாா்டுகளுக்கு தினசரி காய்கறி மாா்க்கெட் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் குறிப்பிட்ட நாள்களில் அந்தந்த வாா்டுகளின் பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நகராட்சி ஆணையா் ரகுராமன் கேட்டுக் கொண்டுள்ளாா்.