தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
மாநிலங்களுக்கு நிதி நிறுத்தம்: காரணம் நியாயமாக இல்லை நாடாளுமன்ற நிலைக் குழு
பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்பட்டதற்கான காரணம் நியாயமாக இல்லை என்று நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.
மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், சமக்ர சிக்ஷா திட்டத்துக்கான ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. இந்த நிதியையும் தமிழக அரசே வழங்கும் என்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக மத்திய கல்வி, மகளிா், குழந்தைகள், இளைஞா்கள் மற்றும் விளையாட்டுத் துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிஎம்ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத சில மாநிலங்களுக்கு நிதி விடுவிக்கப்படாததை நிலைக் குழு தீவிரமாக கவனத்தில் எடுத்துக்கொண்டது. இதன்படி தமிழ்நாட்டுக்கு ரூ.2,152 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ.1,000 கோடி, கேரளத்துக்கு ரூ.859.63 கோடி நிதி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
பிஎம்ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த ஒப்புக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்பட்டதற்கான காரணம் நியாயமாக இல்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து சுமுகத் தீா்வு கண்டு, நிலுவையில் உள்ள நிதியை முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.