செய்திகள் :

``மாநிலப் பிரச்னைகளைத் தீர்க்க சுப்ரீம் கோர்ட் ஒன்றும் ஹெட்மாஸ்டர் கிடையாது'' - மத்திய அரசு வாதம்

post image

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மாநில அமைச்சரவை அனுப்பும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் மனுத்தாக்கல் செய்துள்ளன.

மாநில அமைச்சரவை அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நீண்ட நாட்களுக்கு ஆளுநர்கள் ஒத்தி வைத்துவிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இம்மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஏற்கெனவே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆளுநர்கள் மாநில அரசு அனுப்பும் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்கக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

பி.ஆர்.கவாய்

மத்திய அரசு வாதம்

இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா,''ஒரு மசோதாவை காலவரையின்றி ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது என்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில கருத்தை ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால், ஒரு சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதா அல்லது மறுப்பதா, அதை சட்டமன்றத்திற்கு பரிந்துரைகளுடன் திருப்பி அனுப்புவதா அல்லது ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தை மீறி, ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பான அரசியலமைப்பு விதிகளைத் திருத்த நீதிமன்றத்தை வற்புறுத்துவது தவறான முயற்சியாகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 368 இன் கீழ் பாராளுமன்றம் இயற்றியதைத் திருத்தம் செய்யலாம் என்றாலும், நீதித்துறையின் பங்கு இதில் கருத்து தெரிவிப்பது மட்டுமேயாகும்.

`சுப்ரீம் கோர்ட் ஹெட்மாஸ்டர் கிடையாது'

மாநில அரசும், ஆளுநரும் இணைந்து கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும் என்ற கேரளா அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்கிறோம்.

மாநிலங்களால் எழுப்பப்படும் ஒவ்வொரு பிரச்னையையும் தீர்க்க, சுப்ரீம் கோர்ட் அரசியலில் ஹெட்மாஸ்டர் கிடையாது.

பிரதமர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஆளுநர் அல்லது ஜனாதிபதியுடன் கலந்து ஆலோசித்துதான் தீர்க்க முடியும். இதுதான் இந்திய அரசியலில் நடைமுறையாக இருந்து வருகிறது.

ஜனாதிபதி மாளிகை

இதன் மூலம் இந்திய ஜனநாயகமும் வளர்ந்துள்ளது. அரசியலமைப்பு விதிகள், சுப்ரீம் கோர்ட் கருத்துகள் பின்பற்றப்பட்டுள்ளன.

1970 முதல், மாநில ஆளுநர்கள் 17,150 மசோதாக்களை மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கின்றனர். அவற்றில் 20 மசோதாக்கள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தனக்கு வந்த மசோதாக்களில் 94 சதவீத மசோதாவிற்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் கொடுத்து இருக்கிறார். 623 மசோதாக்களுக்கு மூன்று மாதத்திற்குள் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது" என்று வாதிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நற்பெயருக்கு களங்கம்: ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்த தடை - கூகுளுக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்களை அவரது அனுமதி இல்லாமல் சிலர் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். அவரது புகைப்படத்தை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் மாற்றி அதனை டிசர்ட், கப் போன்றவற்றில் கூட பயன்... மேலும் பார்க்க

Judiciary: ``நீதித்துறையில் பாலின சமத்துவம் வேண்டும்'' - இந்திய வழக்கறிஞர்கள் கவுன்சில் சொல்வதென்ன?

நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி (Vipul Manubhai Pancholi) குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியாக அக்டோபர் 1, 2014 அன்று பதவியேற்றார்.பின்னர் ஜூலை 24, 2023 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஆகஸ... மேலும் பார்க்க

``கோயில் பணத்தை கல்விக்கு செலவிடக் கூடாது என கேட்பது ஏன்? இதில் என்ன தவறு?" - உச்ச நீதிமன்றம்

சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில் கல்லூரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.மனுவில், கோயில் நில... மேலும் பார்க்க

`ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்' - 17 ஆண்டுக்கு பிறகு வெளிவரும் மும்பை மாஃபியா அருண் காவ்லி

மும்பையில் கொலை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அருண் காவ்லி கடந்த 2007ம் ஆண்டு சிவசேனா கவுன்சிலர் கம்லாகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட... மேலும் பார்க்க

சென்னை: ஸ்ரீதேவி வாங்கிய சொத்தில் தகராறு - உயர் நீதிமன்றத்தை நாடிய போனி கபூர்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஈசிஆரில் 1988ம் ஆண்டு வாங்கிய அசையா சொத்துக்கு சட்டவிரோதமாக 3 பேர் உரிமை கோருவதாக, அவர்களின் 'மோசடி' வாரிசு சான்றிதழை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்... மேலும் பார்க்க

Bihar SIR: "4 நாள்தான் கெடு; 65 லட்சம் பேரின் லிஸ்ட்டையும்..." - தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம்

பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தீவிர வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் உள்ளி... மேலும் பார்க்க