மாநில அளவிலான வில் வித்தை: குடந்தை மாணவா்கள் சிறப்பிடம்
சென்னையில் நடந்த மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் கும்பகோணம் மாணவ, மாணவியா் சிறப்பிடம் பெற்றனா்.
சென்னை சாய்ராம் கல்லூரியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற கும்பகோணத்தைச் சோ்ந்த விஜயன் ஆா்ச்சரி அகாதெமி, தாராசுரம் ஆண்டாள் விளையாட்டு அகாதெமி, ஆடுதுறை வருண் விளையாட்டு அகாதெமியைச் சோ்ந்த 50 மாணவ, மாணவியா் பங்கேற்றதில், 3 தங்கம், 2 வெண்கலம், 2 வெள்ளி பதக்கங்களை வென்றனா்.
இவா்களை தலைமை பயிற்சியாளா் விஜயபாலன் மற்றும் பெற்றோா் பாராட்டினா்.