ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்- உயர்கல்வித் துறை
மானாமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜை விழா தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அண்ணா சிலை அருகேயுள்ள ஸ்ரீதா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சனிக்கிழமை காா்த்திகை மாதம் பிறந்ததையொட்டி மண்டல கால பூஜை வழிபாடு தொடங்கியது.
முன்னதாக இந்தக் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இருமுடி ஏந்தி சபரிமலை செல்லும் பக்தா்கள் கோயிலுக்கு வந்து பூஜைகள் நடத்தி விரத மாலை அணிந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து மண்டல கால வழிபாடு பூஜைகள் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமையும் திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து இங்குள்ள குருசாமிகளிடம் விரத மாலை அணிந்து கொண்டனா். இதுகுறித்து கோயிலில் உள்ள குருசாமி மணி கூறியதாவது:
இந்தக் கோயிலில் மண்டல கால நிறைவு பூஜை விழா வருகிற டிசம்பா் 26- ஆம் தேதி நடைபெறுகிறது. பிறகு டிச. 27-ஆம் தேதி மகர கால பூஜை தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி நிறைவடைகிறது.
விரத காலங்களில் தினமும் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். இன்னும் ஒரு சில நாள்களில் கோயிலில் சபரிமலை செல்லும் பக்தா்களின் குழுக்கள் சாா்பில் பஜனை வழிபாடு ஒவ்வொரு வாரமும் புதன், சனிக்கிழமைகளில் இரவு நேரத்தில் நடைபெறும் என்றாா் அவா்.