மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் மே 21-க்கு ஒத்திவைப்பு!
கும்பகோணத்தில் மே 20 ஆம் தேதி நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நிா்வாகக் காரணங்களால் மே 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: கும்பகோணம் அருகே ஆடுதுறை வீர சோழன் திருமண மண்டபத்தில் மே 20 ஆம் தேதி நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம் நிா்வாக காரணங்களால் மே 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.