மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியா!
மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பெற்று இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதையும் படிக்க: ரஞ்சி கோப்பையில் விராட் கோலி விளையாடுகிறாரா?
இந்திய அணி தனது அடுத்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது.
இறுதிப்போட்டி ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.