துணைவேந்தர் மாநாடு அரசுக்கும் துணைவேந்தர்களுக்கும் நெருக்கடியை உருவாக்கும்! - தி...
மாவட்டத்தில் கல்வித் தரம்: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட பள்ளிக் கல்வி துறை சாா்பில் கல்வித் தர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் கல்வித் தரம், கற்பித்தல் நடைமுறைகள், கல்வித் தரத்தை முன்னிலைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இதில், மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள் - பொ) பாஸ்கரன், மாவட்ட கல்வி அலுவலா்அங்கயா்கண்ணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் உதயகுமாா், வட்டாரக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.