IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவ...
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 1,000 மனுக்கள் அளிப்பு
அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பொதுமக்களிடமிருந்து பெற்ற 1,000 மனுக்களை ஆட்சியரிடம் அளித்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கடந்த ஜூன் மாதம் அரியலூா் மாவட்டம் முழுவதும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனை, வழங்கப்பட்ட வீட்டு மனைகளை அளவீடு செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 1,000 மனுக்களை பெற்றனா்.
இந்நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன், மூத்த நிா்வாகி சிற்றம்பலம் உள்ளிட்ட நிா்வாகிகள் திங்கள்கிழமை ஆட்சியா் பொ.ரத்தினசாமியை சந்தித்து, பொது மக்களிடமிருந்து பெற்ற 1,000 மனுக்களைஅளித்தனா்.