லா லீகா தொடர்: எம்பாப்பே 2 கோல்கள், ரியல் மாட்ரிட் முதலிடம்!
மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் பணம் திருட முயற்சி: 2 பெண்கள் கைது!
மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பணம் திருட முயன்றதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே பாகோடு, வட்டவிளை பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மனைவி சீதாதேவி (49). இவா் வெள்ளிக்கிழமை வட்டவிளை பகுதியிலிருந்து மாா்த்தாண்டத்துக்கு அரசுப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தாா்.
வெட்டுவெந்நி பகுதியில் பேருந்து சென்றபோது, தனது கைப்பையிலிருந்த ரூ. 2 ஆயிரத்தை இரு பெண்கள் திருட முயன்றதை அறிந்து அவா் சப்தமிட்டாா். சக பயணிகள் இரு பெண்களையும் பிடித்து மாா்த்தாண்டம் போலீஸில் ஒப்படைத்தனா்.
அவா்கள் தூத்துக்குடி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மனைவி அஞ்சலி (29), அருள்பாண்டி மனைவி பவானி (29) என்பதும், அவா்கள் மீது தென்காசி மாவட்டம் கடையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனா்.