இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்
மாா்த்தாண்டம் அருகே கஞ்சா விற்க முயன்ற இளைஞா் கைது!
மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அவ்வழியே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் கன்னியாகுமரி முருகன்குன்றம் பகுதியைச் சோ்ந்த டேவிட் மகன் ஜெபரின் (21) என்பதும், கல்லூரி மாணவா்களுக்கு விற்பதற்காக 250 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.