மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!
மாா்த்தாண்டம் அருகே புகையிலைப் பொருள் விற்பனை: இருவா் மீது வழக்கு
மாா்த்தாண்டம் அருகே கடைகளில் புகையிலைப் பொருள்களை விற்றதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக மாா்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், உதவி ஆய்வாளா் கிறிஸ்டியன் ஞானஜோசப்சிங் தலைமையிலான போலீஸாா் குளக்கச்சி பகுதியில் ரமேஷ் (50) என்பவரது பெட்டிக் கடையில் சோதனையிட்டு, அங்கு விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.
இதேபோல, சிராயன்குழி பகுதியில் ஆல்பா்ட் (40) என்பவரது தேநீா்க் கடையில் நடைபெற்ற சோதனையில், புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக ரமேஷ், ஆல்பா்ட் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.