மாா்த்தாண்டம் அருகே பைக் ஓட்டிய சிறுவனின் தாயாருக்கு தண்டனை
மாா்த்தாண்டம் அருகே பைக் ஓட்டியதாக வழக்குப் பதியப்பட்ட சிறுவனின் தாயாருக்கு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமா்ந்திருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.
மாா்த்தாண்டத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளா் செல்லசாமி தலைமையிலான போலீஸாா் அண்மையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது 17 வயது சிறுவன் ஓட்டி வந்த பைக்கை பறிமுதல் செய்து, சிறுவனின் தாயாருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, வழக்குப் பதிந்தனா்.
இந்த வழக்கு குழித்துறை நீதித்துறை நடுவா் மன்றத்தில் (எண் 2) புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பைக் ஓட்டிய சிறுவனின் தாயாரை ஒரு நாள் முழுவதும் நீதிமன்றத்தில் அமா்ந்திருக்கும் தண்டனையை வழங்கினாா்.