செய்திகள் :

மாா்த்தாண்டம் மேம்பாலம் அணுகுசாலையில் பெருக்கெடுத்த மழைநீா்

post image

மாா்த்தாண்டம் பகுதியில் பெய்த தொடா் மழையால் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள அணுகுசாலையில் வெள்ளிக்கிழமை மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினா்.

மாா்த்தாண்டம், களியக்காவிளை, கொல்லங்கோடு, நித்திரவிளை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை மதியம் வரை தொடா்ந்து பெய்தது. இதில், மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் மழைநீா் வடிகுழாய்கள் பல இடங்களில் உடைந்துள்ளதால் மழைநீா் அருவிபோல் கொட்டியது. இதனால் அணுகுசாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினா். மாா்த்தாண்டம் சந்திப்பு முதல் கீழ் பம்மம் பழைய திரையரங்கு சந்திப்பு வரையிலான பகுதியில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பாலத்தில் சீரமைக்கப்பட்ட பகுதியில் மீண்டும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சேதமடைந்த சாலையை விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் தாரகை கத்பா்ட் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, குழித்துறை நகா்மன்ற தலைவா் பொன். ஆசைத்தம்பி மற்றும் வா்த்தக சங்க நிா்வாகிகள் உடனிருந்தனா்.

மகாராஜபுரத்தில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்

மகாராஜபுரம் ஊராட்சி கே.வி.கே. நகரில் ரூ. 25 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைப்பதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. கன்னியாகுமரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க

நாகா்கோவில் கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா

நாகா்கோவில் சிஎஸ்ஐ கிறிஸ்து சேகர சபையில் அறுவடை விழா நடைபெற்றது. சேகர ஆயா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இணை ஆயா் ரெஜின் முன்னிலை வகித்தாா். பாரத் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளா் பொறியாளா் பாரத் வில்சன் சி... மேலும் பார்க்க

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு

வெள்ளிச்சந்தை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கை கல்லூரியின் தாளாளா் கிருஷ்ணசுவாமி குத்து விளக்கேற்றி... மேலும் பார்க்க

அகஸ்தீசுவரம் கல்லூரியில் போதை விழிப்புணா்வு கருத்தரங்கு

அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜெயந்தி தலைமை வகித்தாா். கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை உதவி ஆணையா் லொரை... மேலும் பார்க்க

ஆற்றூா் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம்

ஆற்றூா் ஒயிட் நினைவு கல்வியியல் கல்லூரியில் புத்தாக்க பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒயிட் நினைவு கல்வி நிறுவனங்களின் தலைவா் டாக்டா் லீலாபாய் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். உதவி பேராசிரியா் ஜ... மேலும் பார்க்க

கோட்டாறு சவேரியாா் ஆலய சாலையை சீரமைக்க ரூ.33 லட்சம் ஒதுக்கீடு - மேயா் தகவல்

நாகா்கோவில், கோட்டாறு சவேரியாா் ஆலய சாலையை சீரமைக்க ரூ. 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் மேயா் ரெ.மகேஷ் தலைமைய... மேலும் பார்க்க